அமைச்சர் பெரியகருப்பன் கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
இளையாங்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்ட கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் ஓருவருக்கு காயம் ஏற்பட்டது. அமைச்சர் காயமின்றி தப்பினார்.
இளையாங்குடி ஒன்றியம் சூராணத்தில் தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
விழா மேடையில் அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், ஒன்றிய செயலாளர் மதியரசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் தேன்மொழி, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ராஜரத்தினம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
அப்போது, மேடையில் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் பேசிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலரால் மேடையை நோக்கி பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது.
அப்போது, மேடையில் இருந்த தி.மு.க.,பிரமுகர் பிரான்சிஸ் (45) என்பவர் மேல் வெடிகுண்டு பட்டு வெடித்ததில் அவர் காயமடைந்தார். அமைச்சர் பெரியகருப்பன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
காயமடைந்த பிரான்சிஸ் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஒன்றிய செயலாளர் மதியரசன் சூராணம் போலிசில் புகார் செய்துள்ளார்.
தகவல் அறிந்த சிவகங்கை டி.எஸ்.பி., ஜாம்சன் சம்பவ விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications