ரூ. 1000 கோடியில் சிலைகள் வைத்து விவகாரம் -மாயாவுக்கு நோட்டீஸ்
டெல்லி: ரூ. 1000 கோடி செலவில் கன்ஷிராம், அம்பேத்கர், மாயாவதி ஆகியோரது சிலைகள் அமைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசுப் பணத்திலிருந்து இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டு சிலைகளை வைத்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்த பொது நலன் மனுவை விசாரித்த பின்னர் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் இப்படி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக தனது சிலை மற்றும் கன்ஷிராம், அம்பேத்கர் நினைவிடங்களை மாயாவதி இரவோடு இரவாக திறந்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ரூ. 1000 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு தனக்கும், கன்ஷிராம், அம்பேத்கர் ஆகியோருக்கும் சிலைகள், நினைவிடங்களை நிறுவியுள்ளார் மாயாவதி.
இது அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறும் செயலாகும்.
மாயாவதி அரசின் திட்டத்தின் கீழ் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானையின் சிலைகள் 60 நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைகளின் மொத்த மதிப்பு ரூ. 1000 கோடியாகும்.
பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள மாயாவதியின் சிலைகள், யானை சிலைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் ரூ. 1000 கோடியை செலவிட்டு மாயாவதி சிலைகள் வைத்ததை கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்திய அரசியலில் இதை விட அவமானகரமான விஷயம் வேறு ஏதாவது உள்ளதா என்றும் அவர் கேட்டுள்ளார்.
இப்படி மக்கள் வரிப்பணத்தை செலவிட்டுக் கொட்டியுள்ளதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளின் வளமை சூறையாடப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications