பாலு வெற்றியை எதிர்த்து மூர்த்தி; அதிமுக வெற்றியை எதிர்த்து சாருபாலா மனு
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக எம்.பி டி.ஆர்.பாலுவின் வெற்றியை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்டு தோற்ற ஏ.கே.மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதே போல திருச்சி தொகுதியில் தோற்ற காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாவும் தன்னை எதிர்த்து வென்ற அதிமுக வேட்பாளர் குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலுவும், பாமக சார்பில் நானும் போட்டியிட்டோம். தேர்தலில் தில்லுமுல்லு செய்து டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாலு தரப்பினர் 11 லட்சம் வாக்காளர்களுக்கு சாதனைப் புத்தகம் வழங்கினர். இதற்காக மட்டும் ரூ.2 கோடி செலவிடப்பட்டது. தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளார். ஓட்டுப்பதிவு எந்திரத்திலும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மூர்த்தி.
சாருபாலா தொண்டைமானும்...
அதேபோல திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்ற முன்னாள் மேயர் சாருபாலா தொண்டமானும் தன்னை எதிர்த்து வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில்,
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நான் போட்டியிட்டேன். அதிமுக சார்பில் குமார், தேமுதிக சார்பில் விஜயகுமார், பாஜக ர்பில் லலிதா குமாரமங்கலம், லட்சிய தி.மு.க. சார்பில் மன்சூர்அலிகான் உள்பட 24 பேர் போட்டியிட்டனர்.
அதிமுக வேட்பாளர் குமார் 2,98,710 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எனக்கு 2,94,375 ஓட்டுகள் கிடைத்தன. 4,000 ஓட்டுகள் தான் வித்தியாசம்.
ஏராளமான இடங்களில் அதிமுகவினர் ஓட்டுக்காக பணம் கொடுத்து உள்ளனர். தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சட்டசபைக்கு உட்பட்ட தொகுதியில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளது. ரேசன் கார்டு வைத்திருந்தவர்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. இது எனது வெற்றியை பாதித்துள்ளது.
எனவே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications