சடகோபன் ரமேஷ் பெற்றோரிடம் ரூ50,000 கொள்ளை
சென்னை: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷின் பெற்றோரிடம் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியில் துவக்க வீரராக விளையாடியவர் சடகோபன் ரமேஷ். சென்னையை சேர்ந்த இவர் இதுவரை 19 டெஸ்ட் மற்றும் 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பின்னர் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கடந்தாண்டு ஏப்ரலில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலும் நடித்துள்ளார். மடிப்பாக்த்தில் வசித்து வரும் அவரது பெற்றோர்கள் நேற்று ஆலந்தூர் செல்வதற்காக மாநகராட்சி பேருந்து ஒன்றில் ஏறினார். அவர்கள் கையில் வைத்திருந்த பையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பு கொண்டு ரொக்க பணமும், நகைகளும் இருந்துள்ளது.
பேருந்தில் கூட்டம் நெருக்கி அடித்ததால் இருவரும் நின்றவாரே பயணம் செய்துள்ளனர். அப்போது கூட்டத்தில் இருந்த பலே ஆசாமி ஒருவன் அவர்கள் வைத்திருந்த பையின் அடிப்பகுதியை கிழித்து உள்ளே இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிவிட்டான்.
பேருந்தில் இறங்கிய பின்னர் தான் பை கிழிந்திருப்பதையும், அதிலிருந்த பணம் காணாமல் போனதையும் சடகோபனின் பெற்றோர்கள் அறிந்தனர். இதையடுத்து அவர்கள் மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்துனரிடம் விசாரணை செய்தனர்.
நடத்துனர் அவர்களிடம் கூறுகையில்,
மடிப்பாக்கம், ஆலந்தூர் செல்லும் பேருந்துகளில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மர்ம ஆசாமிகள் அதிகம் வருகின்றனர். சிலரை பார்த்ததும் நாங்கள் கண்டுபிடித்து மக்களை உஷார் செய்துவிடுவோம். சில சமயங்களில் கூட்டம் அதிகமிருப்பதால் டிக்கெட் கொடுக்கவே நேரம் இருக்காது என்பதால் அவர்களை கவனிக்க முடியாமல் போய்விடுகிறது என்றார்.
இதையடுத்து மடிபாக்கம் பகுதியில் கூடுதல் போலீசாரை பணியில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications