ஜாக்சன் உடலுக்கு 2வது முறையாக பிரேதப் பரிசோதனை நடந்தது
லாஸ் ஏஞ்செலஸ்: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிவதற்காக அவரது குடும்பத்தினர் தனியாக பிரேதப் பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஜாக்சன் மறைவுக்கு முன்பும் சர்ச்சைகளுடன் வாழ்ந்தார். இறந்த பின்னரும் எப்படி இறந்தார் என்பதில் குழப்பமும், சர்ச்சையும் நிலவி வருகிறது.
ஜாக்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைவதற்கு முன்பு அவருடன் கடைசியாக இருந்தவர் டாக்டர் கோன்ராட் முரே என்பவர். அவர் ஜாக்சன் மறைவுக்குப் பின்னர் காணாமல் போய் விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் டாக்டரை போலீஸார் தேடிக் கண்டுபிடித்து விட்டனர்.
முரே போட்ட ஊசிக்குப் பின்னர்தான் ஜாக்சன் மறைந்ததாக ஒரு தகவல் உள்ளது. மேலும் ஓவர் டோஸ் மருந்துகளும் ஜாக்சன் உயிரைக் குடித்து விட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
இதனால் அவரது பிரேதப் பரிசோதனை முடிவுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பிரேதப் பரிசோதனையை முடித்த போலீஸார் முடிவை மட்டும் அறிவிக்கவில்லை. மேலும் சில சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தனர். உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ஜாக்சனின் குடும்பத்தினர் தனியாக ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்த தீர்மானித்துள்ளதாக அவரது குடும்ப நண்பரான பாதிரியார் ஜெஸி ஜாக்சன் தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று மீண்டும் ஒரு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. எங்கு வைத்து இந்தப் பரிசோதனை நடந்தது என்று தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, ஜாக்சனின் இறுதிச் சடங்குகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications