தொடங்கியது தென் மேற்கு பருவ மழை-15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Rain
டெல்லி: வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் தென்மேற்கு பருவ மழையால் தான் பயனடைகின்றன. கடந்த 1ம் தேதியே தொடங்கியிருக்க வேண்டிய இந்த மழை பெய்யவில்லை.

இதனால் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது. குடிநீர் தட்டுப்பாடும், மின்வெட்டும் நிலவி மக்களை அச்சுறுத்தி வந்தது.

இந் நிலையில் தென் மேற்குப் பருவ மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.

மகாராஷ்டிராவில் தொடங்கிய மழை ஒரிஸ்ஸா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் என பிற மாநிலங்களிலும் பெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் டெல்லியில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் டெல்லியில் அனல் காற்று குறைந்துள்ளது.

பஞ்சாபில் ஜலந்தர், கோஷியாபூர், பகவாரா, ரோபர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

ஆனாலும் இந்த ஆண்டு பருவ மழை சற்று குறைவாகவே பெய்யும் என்று தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+