ஒகனேக்கல் திட்டத்தை ஏற்க மாட்டோம் - கர்நாடகம்
பெங்களூர்: ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் தலையிட்டு சுமூக முடிவு காண உதவ வேண்டும். இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளாது என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ. 1334 கோடி மதிப்பிலான ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும். கடந்த ஆண்டு கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை மூளாமல் தடுக்கவே திட்டத்தை நிறுத்தி வைக்க முதல்வர் உத்தரவிட்டார். தற்போது திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. 2012ம் ஆண்டுக்குள் இத்திட்டம் முடிவடையும் என்று கூறியிருந்தார்.
இதற்கு கர்நாடகம் உடனடியாக பதிலளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தின் நிலையில் மாற்றம் இல்லை. திட்ட இடம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கர்நாடகம் ஏற்கனவே தெளிவா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையீட்டையும் அது கோரியுள்ளது.
பிரதமர் இதில் தலையிட்டு சுமூக தீர்வு காண உதவ வேண்டும். பிரச்சினை சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் என நம்புகிறோம் என்றார் பொம்மை.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications