தமிழறிஞர் வ.அய்.சுப்ரமணியத்திற்கு கருணாநிதி புகழாரம்
சென்னை: மறைந்த மூத்த தமிழறிஞரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான வ.அய். சுப்ரமணியத்தின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேற்று காலை மரணமடைந்தார் வ.அய். சுப்ரமணியம்.
அவரது மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி..
பேராசிரியர் முனைவர் வ.ஐ. சுப்பிரமணியம் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணை தலைவர்களில் ஒருவராக விளங்கி வந்தார். தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராகவும், திராவிட பல்கலை கழகத்தின் இணை வேந்தராவும் விளங்கியவர் அவர்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கிட அடித்தளமிட்டவர். திராவிட மொழியியல் பள்ளியை திருவனந்தபுரத்தில் நிறுவினார்.
முரசொலி அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் விருதினை பெற்றவர். உலக அளவில் தமிழ் மொழியின் பெருமையை உரியவாறு வெளிப்படுத்தியவர்.
தேர்தல் களத்தில் கூட தமிழர் நாகரிகமும், பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டுமென்ற அக்கறையோடு அறிக்கை விட்ட பண்பாளர்களில் ஒருவர். திராவிட மொழியில் ஆய்வினை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இடைவிடாது பணியாற்றி வந்தவர்.
அவரது மறைவு தமிழ் ஆய்வுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், தமிழ் பற்றாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications