நன்கொடை-கோட்டையை முற்றுகையிட்ட மாணவர்கள்
சென்னை: பள்ளி மற்றும் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடித்து வரும் கல்லூரி நிர்வாகத்தை தண்டிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என கோரி அகில இந்திய மாணவர்கள் கழகம் சார்பில் இன்று சென்னையில் கோட்டை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட சுமார் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமீபகாலமாக கல்வி வியாபாரமாகி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் ஆயிரம் முதல் லட்சம் வரை பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பல ஏழை மாணவர்களுக்கு உயர் படிப்பு என்பது வெறும் கனவாக போய்விட்டது. தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளை தொடர்ந்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நன்கொடை ஆரம்பிக்க தொடங்கியிருப்பது வேதனையின் உச்சக்கட்டம்.
ஏழைகள் வாழ்வில் முன்னேறுவதற்கு ஒரே நம்பிக்கையாக இருக்கும் கல்வியும் இது போன்ற செயல்களால் கலப்படமாகி வருவது அவர்களது வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிடுகிறது. கல்வித்துறையில் இருக்கும் இது போன்ற சீர்கேடுகளை உடனடியாக களைந்தால் தான் ஏழை குழந்தைகள் படிக்க முடியும்.
இந்நிலையில் இது தொடர்பாக தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதை சட்டமாக்க வேண்டும் என கூறி இந்திய மாணவர்கள் கழகம் சார்பில் மாணவர்கள் இன்று சென்னையில் அரசு தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 70 பேரை கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications