இந்தாண்டு 7% வளர்ச்சி-மத்திய அரசு நம்பிக்கை
டெல்லி: இந்த ஆண்டு இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும். அதன் பின்னர் வரும் ஆண்டுகளில் இது மேலும் விரிவடையும் என நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் பட்ஜெட்டுக்கு முன்பாக பொருளாதார ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. வருகிற திங்கள்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுள்ள நிலையி்ல பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை இன்று லோக்சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்..
இதில் பணவீக்கம் நீண்ட கால பிரச்சினையாக இருக்காது என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 சதவீத பொருளாதார பற்றாக்குறை இலக்கை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை கடந்த 2008-09ம் ஆண்டில் 6.2 சதவீதமாக இருந்தது. உலகப் பொருளாதார சீர்குலைவால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடாமல் இருப்பதற்காக மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந் பற்றாக்குறை அதிகரிப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் பொருளாதார நிலை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது திருப்தி அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் கூட அதைத் தாண்டி இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் முக்கியமாக இடம் பெற்றுள்ள இன்னொரு அம்சம் என்னவென்றால், மத்திய அரசு நடத்தி நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ரூ. 250 பில்லியன் தொகையை திரட்ட முடியும்.
உணவு மற்றும் உரத்துறையை மறு சீரமைக்க வேண்டும். ஸ்பெக்டரம் ஏலத்தை விரைவுபடுத்த வேண்டும் ஆகிய பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அரசு மற்றும் தனியார் துறையினரால் மேற்கொள்ளப்படும் அடிப்படமைக் கட்டமைப்புத் துறை முதலீடுகளில் நிலவி வரும் தடங்கல்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டியது அவசியம், அவசரம் எனவும் அறிக்கை கூறுகிறது.
அதேபோல 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை (goods and services tax -GST) அமல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான் வருவாய் அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் அரசு பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொண்டால் நிச்சயம் பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications