மைசூரில் மதக் கலவரம்-3 பேர் பலி
மைசூர்: மைசூரில் மதக் கலவரம் வெடித்துள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 3 பேரில் ஒருவர் 15 வயது சிறுவன். இந்த சிறுவன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கலவரம் வெடித்துள்ள உதயகிரி, மந்தி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கலைத்தனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். இருப்பினும் மகாதேவபுரா சாலையில் போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால் அங்கு சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், உள்ள ஹூலியம்மா கோவில் அருகே மசூதி கட்டப்பட்டது. இதை எதிர்த்து ஹூலியம்மா கோவில் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு மசூதி கட்டுவதற்கான வேலைகளை சிலர் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அந்த இடத்தில் பன்றியின் சிதைந்த உடல் பகுதிகளை சிலர் அங்கு போட்டுள்ளனர்.
இதையடுத்து இன்று கலவரம் வெடித்தது. காலை எட்டரை மணியளவில் கலவரம் வெடித்ததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். உடனடியாக கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.
சம்பவம் நடந்த பகுதிகளில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications