புதுவை பேராசிரியர் அலிகார் சாலை விபத்தில் மரணம்
அலிகார்: புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமானுல்லா, அலிகார் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காமர்ஸ் துறையைச் சேர்ந்தவர் அமானுல்லா (62). இவர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டெல்லி வந்து அங்கிருந்து கார் மூலம் அலிகார் போய்க் கொண்டிருந்தார்.
அப்போது, அலிகாருக்கு முன்புள்ள அர்னியா என்ற இடத்தில் கார் வந்தபோது எதிரே வந்த பஸ் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அமானுல்லா படுகாயமடைந்தார்.
உடனடியாக அருகில் உள்ள குர்ஜா என்ற நகரத்திற்கு அவரைக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவ வசதிகள் இல்லை. இதையடுத்து மீண்டும் அவரை புலந்த்சாகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அமானுல்லா உயிரிழந்து விட்டார்.
அமானுல்லாவின் உடலை புதுச்சேரிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அலிகார் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications