ஆஸி-2008ல் 27 இந்திய மாணவர்கள் சாவு, விரையும் கிருஷ்ணா

இது குறித்து அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
எங்கள் நாளிதழ் கடந்த வருடம் நவம்பரில் வன்முறை மற்றும் கொலை குறித்த தேசிய தகவல் மையத்தின் கீழ் இயங்கும் மாநில மற்றும் மாகாண தகவல் மையங்களுக்கு 2008ல் இறந்தவர்களின் தகவல் பட்டியலைத் தருமாறு மனு அளித்தது.
ஆனால், அந்தத் தகவல் மையங்கள் பட்டியலைத் தர மறுத்துவிட்டன. அதே நேரத்தில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 51 வெளிநாட்டு மாணவர்கள் இறந்துள்ளனர். அவர்களில் 34 பேர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. 14 பேர் விபத்துகளிலும் மற்றும் 3 பேர் உடல்நலக்குறைவால் இறந்தனர் என்று அரசு கூறியுள்ளது.
ஆனால் இது குறித்து நாங்கள் நடத்திய புலனாய்வில் இறந்த வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 54 என்று தெரியவந்துள்ளது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது என்று அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸி. விரைகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா
இந் நிலையில் இந்தியர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க அந் நாட்டு அரசுடன் ஆலோசனை நடத்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆஸ்திரேலியா செல்கிறார்.
இந்தத் தாக்குதல்கலைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேட்டு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
இந் நிலையி்ல் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா,
அங்கு கடந்த ஆண்டு 27 இந்திய மாணவர்கள் இறந்தது குறித்து வெளியான செய்தி தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கு சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்த விரைவில் நான் அங்கு செல்கிறேன். விரைவில் எனது பயணத் தேதியை அறிவிப்பேன் என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications