ரூ. 7500 லஞ்சம் வாங்கிய வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது
நெல்லை: நெல்லையில் மின் இணைப்பு தருவதற்கு ரூ. 7500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
பாளையை சேர்ந்தவர் கோமதி நாயகம். இவர் டக்கரம்மாள்புரம் அருகே உள்ள மீட்பர் நகரில் புதிதாக வீடு கட்டுகிறார். இதற்கு மின் இணைப்பு கேட்டு பெருமாள்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதையடுத்து வீட்டை பார்வையிட சென்ற மின்வாரிய இளநிலை உதவி பொறியாளர் சிவகுமார், வணிக பிரிவு உதவியாளர் உதயகுமார் ஆகியோர் சென்றனர்.
அவர்கள் இருவரும் கோமதி நாயகத்திடம் மின் இணைப்புக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். அவர்களிடம் பேரம் பேசி ரூ.7,500 தருவதாக கோமதி நாயகம் ஒப்புக் கொண்டார். பின்னர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்கள் ஆலோசனையின் பேரில் நேற்று மாலை பெருமாள்புரம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு உதயகுமார் மட்டுமே இருந்ததால் அவரிடம் பணத்தை கொடுத்தார்.
அப்போது அலுவலகத்திற்கு வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மனோகர குமார் தலைமையில் போலீசார் உதயகுமாரை கையும் களவுமாக பிடித்து லஞ்சபணத்தை கைப்பற்றினர். அவரிடம் கணக்கில் இல்லாத ரூ.6,500யும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆச்சிமடத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை போட்டனர். வீட்டு மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர் சிவகுமாரை தேடி வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications