தமிழக நகரங்களில் பெட்ரோல்-டீசல் விலை பட்டியல்
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறித்த பட்டியல்..
சென்னை -
பெட்ரோல் - ரூ. 48.58, டீசல் - ரூ. 34.98.
மதுரை -
பெட்ரோல் - ரூ. 48.52, டீசல் - ரூ. 35.40.
கோவை -
பெட்ரோல் - ரூ. 48.50, டீசல் ரூ. 35.25.
திருச்சி -
பெட்ரோல் - ரூ. 48.60, டீசல் - ரூ. 35.50.
நெல்லை -
பெட்ரோல் - ரூ. 48.70, டீசல் - ரூ. 35.59
சென்னை மாநகர கழகத்துக்கு நஷ்டம் ரூ. 4.5 லட்சம்:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களுக்கு தினமும் 20.2 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. டீசல் விலை ரூ. 2 உயர்த்தப்பட்டதன் மூலம் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4.5 லட்சம் கூடுதல் செலவாகும் என்று அதன் நிர்வாக இயக்குனர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசின் முதல் 'சாதனை'-பாஜக:
இதற்கிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் 100 நாள் சாதனை என்று பாஜக கூறியுள்ளது.
அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், முதல் சாதனையைப் படைத்துவிடடார்கள் என்றார்.
அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்துள்ளது. இது காங்கிரஸ் கூட்டணி அரசால் மக்களுக்கு அளிக்கப்பட்ட முதல் பரிசு என்று அக் கட்சி கூறியுள்ளது.
பட்ஜெட் கூட்டம் நடக்கும் நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்திய நடவடிக்கை நாடாளுமன்றத்தை அவமதிப்பதுபோல் ஆகும் என அக் கட்சி கூறியுள்ளது.
டீசல் மீது மத்திய அரசு வரிவிதிப்பை குறைக்க வேண்டும். தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது வரி விதிக்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அக் கட்சி கோரியுள்ளது.
விஜய்காந்த் கண்டனம்:
அதே போல பெட்ரோல்-டீசல் விலைக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அதை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதனால் உணவுப் பொருட்களின் விலை உயரும் என்று அவர் கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications