உயர்நீதிமன்ற நீதிபதியை நான் மிரட்டவில்லை - ராஜா மறுப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மருத்துவ மாணவர் கிருபா ஸ்ரீதர் மற்றும் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்குமாறு கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை மிரட்டியதாக உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி பரபரப்பு குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், உயர்நீதிமன்ற வழக்குகளில் மத்திய அமைச்சர்கள் தலையிடக் கூடாது என்று கண்டித்திருந்தார்.
இந்த நிலையில் யார் அந்த அமைச்சர் என்ற கேள்வி எழுந்தது.
இந்தப் பின்னணியில், மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரைக் கூறி பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று சட்டசபையில் பிரச்சினை எழுப்பினர். இதற்கு திமுகவினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து பாமக உறுப்பினர்களின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், நான் நீதிபதியை மிரட்டவில்லை. அதுதொடர்பாக வெளியாகும் செய்திகள் தவறு என்று மத்திய அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் சார்பாக அவரது உதவியாளர் ஷாஜி குமார் அளித்துள்ள விளக்கத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை அமைச்சர் ராஜா தொலைபேசியல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் தவறு. இதை அமைச்சர் ஏற்கனவே மறுத்துள்ளார். இதில் அடிப்படை இல்லை என்று கூறியுள்ளார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications