ஆண்டுக்கு 8 சிலிண்டருக்கு மேல் வாங்கினால் கூடுதல் கட்டணம்

இப்போது ஒரு சிலிண்டர் ரூ.315.95க்கு விற்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ. 500க்கு மேலாகும். அரசு ரூ. 200 வரை மானியம் தருவதால் நமக்கு ரூ.315.95க்கு கிடைக்கிறது. இந் நிலையில் தான் 8 சிலிண்டெருக்கு மேல் வாங்குவோர் அதை ஒரிஜினல் விலையில் வாங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
கிராமப்புற மக்களுக்கு சூரிய ஒளி அடுப்பு, சூரிய ஒளி குக்கர், சூரிய ஒளி மின் விளக்கு உள்ளிட்டவற்றை மானிய விலையில் அளித்து மண்ணெண்ணெய் மானியத்தை முற்றிலுமாக நீக்கலாம் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உர மானியம் அளிப்பதற்கு பதிலாக விளைச்சலுக்கேற்ப ஊக்கத் தொகை அளிக்கலாம் என்றும், விவசாயிகளே விலையை நிர்ணயிக்கும் முறையை கொண்டு வரவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2008-09ம் நிதி ஆண்டில் உணவு மானியமாக மத்திய அரசு ரூ. 32,667 கோடியை செலவிட்டுள்ளது. ரேஷன் மூலம் அரிசி, கோதுமையை மானிய விலையில் வழங்கவும் இதிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்த மானியம் ரூ. 43,668 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சலுகை விலையில் உணவுப் பொருள்களை வாங்குவதற்கு வசதியாக உணவுக் கூப்பன்களை அறிமுகப்படுத்தலாம் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த கூப்பன்கள் மூலம் ரேஷன் கடை மட்டுமின்றி தாங்கள் விரும்பும் இடத்தில் பொருள்களை மக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் நாடு முழுவதும் வசதிகள் செய்யலாம் என்றும் கூறப்பட்டு்ள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் இல்லை..
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது. பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது விலையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
வேண்டுமானால் பெட்ரோலியப் பொருள்கள் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரியைக் குறைத்து விலையைக் குறைத்துக் கொள்ளலாம்.
சாமானிய மனிதர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் மிகக் குறைந்த அளவுக்கு விலையை அதிகரித்துள்ளோம். சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை அரசு உயர்த்தவில்லை என்றார்.
ஏமாந்த ஜனம்..சிலிண்டர் விலை ரூ.1.40 உயர்வு:
சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை என மத்திய அரசு அறிவித்தாலும் அதன் விலை சிலிண்டருக்கு ரூ.1.40 வரை அதிகரித்துள்ளது.
ரூ.314.55 ஆக இருந்த சிலிண்டர் இப்போது ரூ.315.95க்கு வினியோகிக்கப்படுகிறது. ஏஜென்சிகளின் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதிகரிக்கப்பட்ட கமிஷனை பெட்ரோலிய நிறுவனங்கள் ஏற்காமல் அதை பொது மக்கள் தலையில் சுமத்தியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications