வீட்டை ஆக்கிரமிப்பு செய்த போலி வக்கீல் உட்பட மூவர் கைது
சென்னை: சென்னையில் மத்திய அரசு அதிகாரி ஒருவரின் வீட்டை ஆக்ரமித்து கொண்ட காலி செய்ய மறுத்த போலி வக்கீல் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி மத்திய கலால் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் ரவி (42). சென்னையை சேர்ந்த இவருக்கு கீழ்ப்பாக்கத்தில் சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது. அதை சிவகுமார் (52) என்பவருக்கு சமீபத்தில் வாடகைக்கு விட்டிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வரும் சிவகுமார், வாடகை ஒழுங்காக குடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ரவி அவரை வீட்டை காலி பண்ண சொல்லியிருக்கிறார். ஆனால் சிவகுமார் தான் ஒரு வக்கீல் என்றும், நீதிமன்றத்தில் இந்த பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து ரவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சிவகுமாரை உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும், அவர் வீட்டை பூட்டி சாவியை ரவியிடம் ஒப்படைக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி அந்த வீட்டுக்கு பிரமிளா (30) மற்றும் ராதை (44) என இரண்டு பெண்களுடன் வந்த சிவகுமார், பூட்டை உடைத்து நீதிமன்ற உத்தரவை மீறி விட்டை ஆக்ரமித்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரவி, டெல்லியில் இருந்து சென்னை போலீசாரை தொடர்பு கொண்டார்.
இதையடுத்து போலீசார் அங்கு வந்து சிவகுமாரை வீட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தனர். ஆனால், மிகவும் தெனாவட்டாக பேசிய சிவகுமார் போலீசாரை மிரட்டினார். வீட்டை காலி செய்ய முடியாது என கூறிவிட்டார். இதையடுத்து போலீசார் சிவகுமார், பிரமிளா, ராதை ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் சிவகுமார் தான் ஒரு வக்கீல் என கூறி வந்ததும் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications