தர்மபுரி மருத்துவ கல்லூரியில் இன்று டெல்லி குழு ஆய்வு
சென்னை: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழு இன்று மீண்டும் ஆய்வு செய்கிறது.
100 எம்பிபிஎஸ் இடங்களுடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முடித்து இரண்டாம் ஆண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந் நிலையில் கடந்த மாதம் கல்லூரியை ஆய்வு செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழு, அடிப்படைக் கட்டமைப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் டெல்லி சென்று குறைபாடுகளை உடனடியாக சரி செய்துவிட்டதாகவும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தர வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து 3 பேர் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழு இன்று தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மீண்டும் ஆய்வு செய்கிறது.
இந்தக் குழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தந்தால் தமிழகத்தில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் கூடும். எனினும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்ட எம்பிபிஎஸ் கவுன்சலிங்கின்போதுதான், இந்தக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க முடியும் என்று தெரிகிறது.
எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சலிங் வரும் 6ம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
பிசி வகுப்பினர் கட்-ஆப் 196.75:
இந் நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களில் சேர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் 196.75 ஆக இருக்கும் என்று தெரிகிறது.
முற்படுத்தப்பட்ட மாணவர்கள் உள்பட பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் 197.75 ஆக உள்ளது.
இந் நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆப் ஒரு மதிப்பெண் மட்டும் குறைந்து 196.75 ஆக இருக்கும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications