தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு ரத்தாகுமா?
சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வை ரத்து செய்யலமா, கூடாது என்பது குறித்து கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவருடைய கருத்துக்களையும் அரசு கேட்டுத்தான் முடிவெடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவது குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், தமிழ்நாட்டில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு,
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ள கருத்து பற்றி தேசிய அளவில் விவாதம் நடந்து வருகிறது. தமிழ் நாட்டிலும் இதற்கு ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 6ம் வகுப்பு, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மேல் நிலைப்படிப்புகளை தொடர முக்கியமான படிக்கல் போன்றது. பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, 12ம் வகுப்பு படிப்பை தொடர இது தேவைப்படுகிறது.
மத்திய அமைச்சர் சொல்லி இருப்பது ஒரு கருத்துதான். மாநில அரசுகளுடன் கலந்து பேசிய பின்னர் முடிவெடுக்கலாம் என்றுதான் அவர் கூறியிருக்கிறார்.
மாநில அரசிடம் மத்திய அரசு இதுவரை கருத்து ஏதும் கேட்கவில்லை. அப்படி கருத்துக் கேட்டால் தமிழ்நாட்டில் கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு முதல்வரையும் கலந்து ஆலோசித்து அதன் பிறகு மத்திய அரசுக்கு பதில் தெரிவிக்கப்படும் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications