For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட்-முக்கிய அம்சங்கள்

By Staff
Google Oneindia Tamil News

-பட்ஜெட் எதிரொலி-சென்செக்ஸ் 713 புள்ளிகள் சரிந்தது
-பிரான்ட்டட் நகைகள் விலை குறையும்
-பெட்ரோலால் இயங்கும் டிரக்குகள் மீதான கலால் வரி குறைப்பு
-பைபர் மீதான வரி 8 சதவீத அதிகரிப்பு
-பயோ டீசல் மீதான கஸ்டம்ஸ் வரி குறைப்பு
-தங்கம் மீதான சுங்க வரி 10 அவுன்சுக்கு ரூ. 200 அதிகரிப்பு
-பருத்தி ஆடை உற்பத்தி மீது மீண்டும் 4 சதவீத வரி
-செட்-டாப் பாக்ஸ்கள் மீதான வரி அதிகரிப்பு-விலை கூடும்
-சில முக்கிய மருந்துகள் மீதான இறக்குமதி வரி குறைப்பு
-கட்சிகளுக்கு தரும் நன்கொடைக்கு முழு வரி விலக்கு
-எல்சிடி டிவிக்கள், காலணிகள் மீதான வரி குறைப்பு-விலை குறையும்
-மொபைல் போன்கள் விலை குறையும்
-சென்செக்ஸ் கிடுகிடு சரிவு - 14501 புள்ளிகள்
-ரூ. 10 லட்சத்துக்கு அதிகமான ஆண்டு ஊதியதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு 1.6 லட்சமாக உயர்வு
-மற்றவர்களுக்கு வருமான வரியில் மாற்றமில்லை
-அத்தியாவசியப் பொருள் விற்பனை வரி ரத்து
-வருமான வரி விலக்கு உச்சவரம்பு 1.6 லட்சமாக உயர்வு
-ஏற்றுமதியாளர்களுக்கான வரி விடுமுறை (விலக்கு) 2011 வரை நீட்டிப்பு
-பட்ஜெட்-சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு!
-ஊழியர்களுக்கு நிறுவனங்கள் தரும் சலுகை திட்டங்கள் மீதான வரி (fringe benefit tax) வாபஸ்
-மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கான வருமான வரி விலக்கு ரூ. 1 லட்சமாக உயர்வு
-தனி நபர் வருமான வரி மீதான 10 சதவீத துணை வரி வாபஸ்
-மகளிருக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ. 1,90,000 ஆக உயர்வு
-மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ 2,40,000 ஆக உயர்வு
-முதியோருக்கான வருமான வரி விலக்கு ரூ. 15,000 அதிகரிப்பு
-பெண்களுக்கான வருமான வரி விலக்கு ரூ. 10,000 அதிகரிப்பு
-தனி நபர் மீதான 10 சதவீத கூடுதல் வருமான வரி வாபஸ்
-கார்பரேட் வரி விதிப்பில் மாற்றம் இல்லை
-இலங்கை தமிழர்கள் நலனுக்கு ரூ. 500 கோடி
-2010 ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமல்
-45 நாட்களில் புதிய நேரடி வரிகள் திட்டம் அறிவிப்பு
-பெங்களூரில் மத்திய வரிகள் ஒருங்கிணைப்பு அலுவலகம் அமைப்பு
-நேரடி வரிகள் வருவாய் 58% அதிகரிப்பு
-பட்ஜெட் செலவீனங்கள் ரூ. 10,28.032 கோடி
-கடன்களுக்கு அரசு செலுத்தும் வட்டிச் செலவுகள் ரூ. 2 லட்சம் கோடி
-வருவாயில் 3ல் ஒரு பங்கு வட்டிக்கே போகிறது
-வருவாய் பற்றாக்குறை 4.8%
-நிதிப் பற்றாக்குறை 6.8 %
-பாதுகாப்புத்துறைக்கு 1.42 லட்சம் கோடி ஒதுக்கீடு
-திட்டச் செலவுகள் 34 சதவீதம் அதிகரிப்பு
-மொத்த செலவுகள் 10 லட்சம் கோடியைத் தாண்டுவது இதுவே முதல்முறை
-1009-10ல் திட்டமில்லா செலவுகள் 6.9 லட்சம் கோடி
-2009-10ல் மொத்த செலவு ரூ. 10 லட்சம் கோடி
-2009-10ல் திட்ட செலவுகள் மதிப்பீடு 3.9 லட்சம் கோடி
-சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்கு ரூ. 1740 கோடி
-அய்லா புயல் நிவாரண நடவடிக்கைகளுக்கு ரூ. 1000 கோடி
-தலா ரூ. 25 கோடியில் முர்ஷிதாபாத், மலப்புரத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலை வளாகங்கள்
-சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி
-கமான்வெல்த் விளையாட்டுகளுக்கு ரூ. 3,472 கோடி
-ரூ. 1 லட்சம் வரை வீட்டுக் கடன்களுக்கு வட்டி மானியம்
-ராணுவத்துக்கு நிகராக துணை ராணுவப் படையினருக்கு படிகள்
-தேசிய கங்கைத் திட்டத்திற்கு ரூ. 562 கோடி
-ஓய்வு பெற்ற ராணுவத்தினர் ஓய்வூதியம் அதிகரிப்பு
-மத்திய பாராமிலிட்டரிப் படையினருக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம்
-10000 வீடுகள் கட்ட திட்டம்
-பயோமெட்ரிக் கார்ட் திட்டத்துக்கு ரூ. 125 கோடி
-புதிய ஐஐடிக்கள், என்ஐஐடிகளுக்கு ரூ. 435 கோடி
-ஹரியாணா-பஞ்சாப் பல்கலைக்களுக்கு ரூ. 50 கோடி
-12 முதல் 18 மாதங்களில் மக்கள் அனைவருக்கும் பயோ-மெட்ரிக் ஸ்மார்ட் கார்டுகள்
-ஏழைகளுக்கு ரூ. 3க்கு 25 கிலோ அரிசி/கோதுமை
-தேசிய பெண்கள் கல்வி இயக்கம் துவக்கப்படும்
-வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உணவு உத்தரவாத திட்டம்.
-இதற்காக ரூ. 350 கோடி ஒதுக்கீடு
-ஏழைகளுக்கு ரூ. 3க்கு அரிசி/கோதுமை
-ஊரக வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ. 2000 கோடி
-ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடியால் 5 லட்சம் பேருக்கு பயன்
-3 ஆண்டுகளில் பெண்கள் கல்வி இரு மடங்காக்க நடவடிக்கை
-தமிழகத்திலும் ராஜஸ்தானிலும் மாபெரும் ஜவுளிப் பூங்காங்கள்
-கல்விக் கடனுக்கு முழு வட்டியும் தள்ளுபடி-அது வங்கிகளுக்கு மானியமாக தரப்படும்
-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மாபெரும் வெற்றி
-தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ. 39,000 கோடி
-இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 8800 கோடி
-பொதுத்துறை வங்கிகள்-காப்பீட்டு நிறுவனங்கள் தனியார்மயமாகாது
-அன்னிய-உள்நாட்டு முதலீடுகளை எளிதாக்க நடவடிக்கை
-தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 100 ஆக உயர்வு
-பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவனங்களில் அதிக மக்கள் முதலீடுக்கு திட்டம்
-ரயில்வேவுக்கு இடைக்கால பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 15,800 கோடி ஒதுக்கீடு
-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தால் 4.47 கோடி பேருக்கு வேலை கிடைத்தது
-பொதுத்துறைகள் நாட்டின் தூண்கள். அவை தனியார்மயமாகாது
-வருமான வரி தாக்கல் எளிதாக்கப்படும்
-வரி தாக்கலுக்கு சரால்-2 திட்டம் அறிமுகமாகும்
-பொருளாதார சரிவால் வங்கித்துறைக்கு பெரும் பாதிப்பில்லை
-பொருளாதார சரிவால் இந்தியாவுக்கு பிற நாடுகளை விட குறைவான பாதிப்பே
-பத்திரிக்கைத் துறைக்கு உதவி நிதி 6% அதிகரிப்பு
-பெட்ரோலிய பொருட்கள் விலையை நிர்ணயிக்க நிபுணர் கமிட்டி
-பொருளாதார நெருக்கடியால் சிறுதொழில் துறைக்கு கடும் வீழ்ச்சி
-சிறுதொழில்துறைக்கு கூடுதல் நிதி
-சர்வதேச விலைக்கு ஏற்றபடி பெட்ரோல்-டீசல் விலைகளில் மாற்றம்
-பட்ஜெட் எதிரொலி-சென்செக்ஸ், நிப்டியில் வீழ்ச்சி
-மின் திட்டங்களுக்கு ரூ. 2089 கோடி
-ரூ. 3.25 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு
-குறைந்த வட்டியில் விவசாயிகளுக்குக் கடன்
-தேசிய எரிவாயு கட்டமைப்பு உருவாக்கப்படும்
-மும்பை வெள்ளத் தடுப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி
-விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு
-ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை
-அடிப்படை கட்டமைப்பு-சமூக வளர்ச்சித்துறைக்கு கூடுதல் நிதி
-விவசாயக் கடன்களுக்கு 3.25 லட்சம் கோடி ஒதுக்கீடு
-ரயில்வேவுக்கு ஒதுக்கீடு 15,000 கோடி கூடுதல் நிதி
-நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு வசதிக்கு ரூ. 3972 கோடி
-தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு 23% கூடுதல் நிதி
-எரிவாயு உற்பத்தி இரு மடங்காக்கப்படும்
-இந்திய அடிப்படை கட்டைப்பு நிறுவனம் உருவாக்கப்படும்
-ஜவஹர்லால் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்துக்கு 83% கூடுதல் நிதி
-ஜிடிபி சரிவால் வேலை உருவாக்கம் பாதிப்பு
-தனியார் முதலீடுகளுககு முக்கியத்துவம்
-கடந்த இரு காலாண்டுகளும் மிக மோசமானவை
-அடிப்படைக் கட்டமைப்புத்துறை வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம்
-விவசாயத்துறை வளர்ச்சியை 4% ஆக அதிகரித்தாக வேண்டும்
-அன்னிய முதலீடு மிக மிக அவசியம்
-சந்தையில் கூடுதல் நிதி புழக்கத்துக்கு வழி செய்யப்படும்
-9% வளர்ச்சியை மீண்டும் எட்டுவது பெரும் சவால்
-ஆனால், அதை எட்டியாக வேண்டும்
-உள்நாட்டு தொழில்துறையில் மீண்டும் வளர்ச்சி தெரிகிறது
-பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு 1.86 லட்சம் கோடி முதலீடு
-விவசாயத்துறையில் 4% வளர்ச்சி நிலைநிறுத்தப்படும்
-கடந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 6.7%
-நிதிப்பற்றாக்குறை 6.9%
-தனியார் துறை மூலமே வளர்ச்சியை ஸ்திரப்படுத்த முடியும்
-அன்னிய முதலீட்டார்கள் இந்தியாவில் முதலீடு செய்வது மீண்டும் அதிகரிக்கிறது
-9% வளர்ச்சியை எட்டி, நிலைநிறுத்த நடவடிக்கை
-பொதுத்துறையின் செயல்பாடு சீர்படுத்தப்படும்
-2008-09ல் ஒட்டுமொத்த உற்பத்தி சரிவு
-அடிப்படை கட்டமைப்பு முதலீடு 9 % வளர்ச்சி
-1.2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X