நர்சிங் மாணவிகள் கற்பழிப்பு-பிரதமருக்கு கேரளா கடிதம்
திருவனந்தபுரம்: ஆந்திராவில் கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆந்திர மாநிலம் கொவூர் சட்டசபை தொகுதி தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ டி.வி.ராமாராவ். இவர் மேற்கு கோதவரி மாவட்டத்தில் நிடடோவலு என்ற பகுதியில் ஸ்புருகா நர்சிங் கல்லூரி என்ற பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் அந்த கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னை எம்எல்ஏ கற்பழித்துவிட்டதாக புகார் செய்தார். இவரை தொடர்ந்து மேலும் 4 மாணவிகள் அவர்களை தங்களை கற்பழிக்க பலமுறை முயன்றதாக கூறினர்.
அந்த எம்எல்ஏ மாணவிகளுக்கு ஆசை காட்டியதாகவும், அதற்கு மசிய மறுக்கும் மாணவிகளை மிரட்டியதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த மாணவிகள் ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியை சந்தித்து புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்து அவர்கள் ஆந்திர மாநில கவர்னர் என்.டி.திவாரியையும் சந்தித்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இந்த வழக்கை சிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கேரள அரசு கண்டித்துள்ளது. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களுக்கு கேரள சுகாதார துறை அமைச்சர் டிகே ஸ்ரீமதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எம்எல்ஏ மறுப்பு...
ஆனால், இதை எம்எல்ஏ ராமாராவ் மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற செயல்களில் சிலர் இறங்கியுள்ளனர். நான் நீதிக்காக போராடுவேன். இந்த குற்றச்சாட்டு உண்மை அல்ல என்பதை நிரூபிப்பேன். நான் ஒரு தலித் என்பதால் எனக்கு எதிராக கொடுமை நடக்க பார்க்கிறது என்றார்.
பொய் வழக்கு...
தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் எர்ரான் நாயுடு கூறுகையில், ஆந்திர அரசு, தெலுங்கு தேசம் எம்எல்ஏவை பொய் வழக்கில் மாட்டிவிட பார்க்கிறது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications