குடிபோதையில் ரகளை-போலீசை கடித்த ஏட்டு!
சென்னை: சென்னையில் நடுரோட்டில் குடிபோதையில் ரகளை செய்த ஏட்டு ஒருவர் தன்னை சமாதானம் செய்ய முயன்ற சக போலீஸ்காரரை கடித்து காயப்படுத்தினர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் ராமச்ச்ந்திரன் (51). அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு வரும் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது. இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர் சமீபத்தில் தான் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அவர் திருவான்மியூர் சிக்னல் அருகே அந்த பக்கமாக செல்லும் ஆட்டோக்காரர்களிடம் வம்பிழுத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவை நிறுத்தி மண்ணடியில் இருக்கும் தனது வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், ஆட்டோ டிரைவர் வர மறுத்துவிட்டார்.
இதையடுத்து ராமச்சந்திரன் ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்தார். அப்போது அங்கு ஏட்டு ராமச்சந்திரனுடன் பணிபுரியம் ராஜேந்திரன் என்பவர் அங்கு வந்தார். அவர் ராமச்சந்திரனை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், குடிபோதையில் இருந்த ராமச்சந்திரன் அவரை கடுமையாக திட்டியுள்ளார்.
என்னைவிட வேலை அனுபவம் குறைந்த நீ எனக்கு புத்தி கூறுவதா என கூறி அவரை அடித்து, உதைத்துள்ளார். மேலும், அவரது கையில் பலமாக கடித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் மோதி கொள்வதை பார்த்த பொது மக்கள் அப்பகுதியில் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். இந்த தகவலை கேள்விப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துறை அந்த இடத்துக்கு விரைந்து வந்து ராமச்சந்திரனை கைது செய்து, திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அவர்கள் ஏட்டு ராமச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications