தமிழகத்தில் 35 புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி
சென்னை: தமிழகத்தில் 35 புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துமே சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகும்.
இதற்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில் கல்விக் கவுன்சில் வழங்கியுள்ளது.
இவை தவிர 36 கல்லூரிகள் அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளன. ஜூலை 10ம் தேதியன்று தொடங்கும் பொது கவுன்சிலிங்கில் சேர இந்தக் கல்லூரிகளும் ஆவலுடன் உள்ளன.
35 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதன் மூலம் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 400ஐத் தாண்டியுள்ளது.
தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 348 ஆகும். இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 346 சீட்கள் உள்ளன.
அங்கீகாரம் பெற்ற 35 கல்லூரிகளில் ஏற்கனவே 12 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு விட்டன. எனவே இவர்கள் ஜூலை 10ம் தேதி தொடங்கும் பொது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியும்.
இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 70 புதிய கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கீகாரம் கிடைத்துள்ள பெரும்பாலான புதிய கல்லூரிகள் கோவை பிராந்தியத்தில் வருகின்றன. இவை அனைத்தும் கோவை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்படும்.
இங்கு மட்டும் 11 புதிய கல்லூரிகள் வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 35 கல்லூரிகளிலும் தலா 240 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் மேலும் 36 கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் கிடைத்து விட்டால் தமிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் இடங்கள் ஒன்றரை லட்சத்தைத் தாண்டி விடும். இதன் மூலம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் சீட் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications