செங்கோட்டை-சென்னை வாராந்திர சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு கூடுதலாக வாரம் ஒரு முறை சிறப்பு ரயில் விடப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

செங்கோட்டையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் பெருகி வரும் ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கூடுதல் ரயில் இயக்கும்படி தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து செங்கோட்டையில் இருந்து வாரம் ஒரு முறை ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இந்த ரயில் ஜூலையில் 5, 12, 19, 26, ஆகஸ்டில் 2,9,16,23,30, செப்டம்பரில் 6,13,20,27, அக்டோபர் 4,11,18,25, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ.264. சாதாரண பயணி கட்டணம் ரூ.134 ஆகும். தற்போது 27-9-2009 வரை முன்பதிவு செய்யப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குலம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டைக்கு ஒவ்வொரு சனிக் கிழமையும் இரவு 8.15 மணிக்கு புறப்படுகிறது.

இந்த ரயில் ஜூலையில் 11,18,25, ஆகஸ்டில் 1,8,15,22,29, செப்டம்பரில் 5,12,19,26, அக்டோபரில் 3,10,17,24,31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+