தமிழக அரசு-ஜப்பானின் தோஷிபா புதிய ஒப்பந்தம்!
சென்னை: அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான ஸ்டீம் டர்பைன் மற்றும் ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை தமிழகத்தில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசும் தோஷிபா ஜேஎஸ்டபிள்யூ டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
ஜப்பானின் தோஷிபா எலெக்ட்ரானிக் நிறுவனமும் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனமும் கூட்டாக அமைக்கும் தொழிற்சாலை இது.
இந்த ஒப்பந்தப்படி சென்னையிலிருந்து 18 கிமீ வடக்கே 400000 சதுர மீட்டர் பரப்பளவில் தங்கள் தொழிற்சாலைக்கான இடத்தை குத்தகை அடிப்படையில் அரசிடமிருந்து பெறுகிறது தோஷிபா ஜேஎஸ்டபிள்யூ.
160 மில்லியன் டாவலர் முதலீட்டில் துவங்கும் இந்த நிறுவனத்தின் பூர்வாங்கப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தி முழு அளவில் துவங்கும்.
இந்தத் தொழிற்சாலை அமைந்து உற்பத்தி துவங்கினால், 500 மற்றும் 1000 மெகாவாட்ஸ் திறன் கொண்ட அனல் மின்சார நிலையங்களின் உள்கட்டமைப்புத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும்.
ஜப்பானில் உள்ள தோஷிபாவின் பவர் ப்ளாண்ட் இந்த புதிய தொழிற்சாலைக்கு முழு அளவில் உதவிகளைச் செய்யும் என அறிவித்துள்ளார் தோஷிபா ஜேஎஸ்டபிள்யூ டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் இடாரு இஷிபாஷி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications