பங்குச் சந்தையில் தொடரும் பட்ஜெட் 'எஃபெக்ட்'!
மும்பை: பங்குச் சந்தையில் இன்னும் தொடர்கிறது பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் எஃபெக்ட். ஆரம்பத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மயமாக்கல் இல்லை என்று கூறிய பிரணாப் முகர்ஜி, பின்னர் 'இப்போதைக்கு இல்லை, ஆனால் பின்னர் செய்யப்படும்' என்று சமாளித்தார்.
ஆனால் சர்வதேச பொருளாதாரச் சூழல், இந்திய அரைகுறை பொருளாதார அறிவுஜீவிகளின் கணிப்புக்கேற்ப இல்லை. அரசுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கினால், இந்தியாவின் நிலைமையும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருளாதார நச்சுச் சுழலுக்குள் சிக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. இந்த உண்மை தாமதமாக உறைத்ததால், பல முதலாளித்துவ நாடுகள் தொழில் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயன்று வருகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதுவரை விலை நிர்ணயத்தை சந்தை சக்திகளே நிர்ணயித்துக் கொள்ளும் முறை இருந்தது. ஆனால் இப்போது விலைகளை கட்டுப்படுத்த புதிய மெக்கானிசத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆனால் இந்தியாவிலோ, தனியார் துறையினரை வளர்த்தெடுக்க, அரசு நிறுவனங்களைப் பலிகொடுக்கும் போக்கு தொடர்கிறது.
இந்த நிலையற்ற போக்கினால் பங்குச் சந்தையிலும் பொருளாதாரத்திலும் நிலையற்ற போக்கு தொடர்கிறது.
கடந்த மூன்று தினங்களாக இந்தியப் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த பங்குச் சந்தை சென்செக்ஸ் நேர முடிவில் 400 புள்ளிகளை இழந்தது.
நிப்டியில் 123 புள்ளிகள் வீழந்தன. சுஸ்லான், டிஎல்எப், டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஏசிசி, பிபிசிஎல், மாருதி போன்ற நிறுவனப் பங்குகள் மட்டும் சுமாரான லாபத்தில் கைமாறின.
சென்செக்ஸ் 13769 புள்ளியிலும், நிப்டி 4078 புள்ளியிலும் நிறைவு பெற்றது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications