'கல்லி' கிரிக்கெட்-வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
டெல்லி: பிசிசிஐயின் அனுமதி பெறாத 'டென்-10 கல்லி கிரிக்கெட்' தொடர் உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு (பிசிசிஐ)போட்டியாக கபில் தேவ் தலைமையில் ஐசிஎல் அமைப்பு துவக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு பிசிசிஐ அனுமதி அளிக்காத நிலையில் அதில் இணைந்து விளையாடிய வீரர்கள் மீது பிசிசிஐ தடை விதித்தது. வீரர்கள் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியதை அடுத்து தற்போது அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கல்லி கிரிக்கெட் தொடர் என்ற பெயரில் 10 ஓவர்கள் கொண்ட போட்டி தொடர் ஒன்று நடக்கவிருக்கிறது. இதில் இந்திய வீரர்கள் பங்கேற்க கூடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான அறிமுக விழாவில் பங்கேற்ற சந்தீப் பாட்டீல், மதன் லால், சபா கரீம் உள்ளிட்ட முன்னாள் வீரர்களை கடுமையாக எச்சரித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,
டென்-10 கல்லி கிரிக்கெட் தொடரை நடத்தும் அமைப்பு அதற்கு பிசிசிஐ அனுமதி கொடுத்துள்ளதாக கூறுவது உண்மை அல்ல. இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களோ அல்லது பிசிசிஐ உடன் தொடர்பில் இருக்கும் முன்னாள் இந்திய வீரர்களோ இத்தொடரில் பங்கேற்க கூடாது.
அதேநேரத்தில் அடுத்த சீசன் முதல் உள்ளூர் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக ஜசிஎல் அமைப்பில் இருந்து வெளியேறிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார் ஸ்ரீனிவாசன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications