நீதிபதியை உதைத்த வக்கீல்கள்-டெல்லியில் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஒருவரை வக்கீல்கள் கும்பலாக சென்று அடித்து, உதைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டெல்லி மாவட்ட நீதிமன்ற அலுவலகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
டெல்லி ரோகிணி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பங்கஜ் குப்தா, விவகாரத்து தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வக்கீல் இடையில் புகுந்து நீதிமன்ற பணிகளில் குறுக்கீடு செய்தார். இதையடுத்து நீதிபதி, அந்த வக்கீலை நீதிமன்ற பணிகளில் குறுக்கீட கூடாது என எச்சரித்தார்.
உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிய அந்த வக்கீல், மேலும் பல வக்கீல்களை அழைத்து கொண்டு மீண்டும் அங்கு வந்தார். அவர்கள் நீதிபதியை தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் அவர்கள் நீதிபதி வீற்றிருந்த மேடையின் மீது ஏறினர். தங்களை தடுக்க வந்த நீதிமன்ற அலுவலகர்களை அலேக்காக தூக்கி வீசினர்.
தொடர்நது வெறியாட்டத்தில் ஈடுபட்ட அந்த வக்கீல்கள் நீதிபதியை அடித்து உதைத்தனர். அவரை சுவர் மீது நிற்க வைத்து அவரை அடித்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதை டெல்லி பார் கவுன்சில் தலைவர் பிஎஸ் ராணா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கு கிடைத்த தகவலின் படி அவர்களை நீதிபதியை தாக்கவில்லை. அவருடன் வாக்குவாதம் மட்டுமே செய்துள்ளனர் என்றார்.
ஜனநாயக காவலர்களாக கருதப்படும் நீதிபதிகளில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications