அரசு - பயிற்சி டாக்டர்கள் பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: அரசுடன் பயிற்சி டாக்டர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிந்தது. உடன்பாடு ஏற்படும் வரை ஸ்டிரைக்கைத் தொடரப் போவதாக பயிற்சி டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
உதவித் தொகையை உயர்த்தக் கோரி பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மாணவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அறிவித்த உதவித் தொகை உயர்வை அவர்கள் நிராகரித்து விட்டனர். உயர்வு போதாது, கூடுதலாக தரப்பட வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், பயிற்சி டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று மாலை பயிற்சி டாக்டர்கள் சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினர்.
ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர் சிவப்பிரகாசம் கூறுகையில், கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். உடன்பாடு ஏற்படும் வரை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மாட்டோம் என்றார்.
இதன் மூலம் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வரும் வழி தெரியவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications