தமிழக கோவில்களில் யோகா-தியான பயிற்சி
சென்னை: தமிழகம் முழுவதும் 52 கோவில்களில் பொது மக்களுக்கு தினமும் காலையில் யோகா- தியான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அளிக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சட்டசபையில் இன்று தனது துறைக்கான மானிய கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்து அமைச்சர் கூறுகையில்,
நிதி வசதியும், இட வசதியும் உள்ள 52 கோவில்களில் பொது மக்கள் பக்தர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பேணி காக்கும் பொருட்டு தினமும் காலையில் தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு யோகா- தியான பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
114 முக்கிய கோவில்களில் புதிதாக நூல் நிலையம் தொடங்கப்படும். ஏற்கனவே நூல் நிலையங்கள் இருந்தால் அவை மேம்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் 1,229 கோவில் குளங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் தூர்வாரி செப்பனிடவும் மழை நீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவில்களில் திருட்டு, கொலை முதலிய நிகழ்வுகளை தடுக்க 31 கோவில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
337 கோவில்களில் எச்சரிக்கை மணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 24 கோவில்களில் எச்சரிக்கை மணி அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, ராமேசுவரம், ஸ்ரீரங்கம், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவில் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 750ல் இருந்து 800 ஆக உயர்த்தப்படும். நிதி வசதியி்ல்லாத கோவில்களில் பூஜைகள் செய்யும் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications