யுஎஸ் விசா-போலி ஆவணம் தந்த கோவை பெண் கைது
சென்னை: சென்னை அமெரிக்க தூதரகத்தில் போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கோவை மதுக்கரை சிட்கோ ரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அருண் (28) அமெரிக்காவில் பணி புரிகிறார். இவர் அல்அமீன் என்ற அருள்மொழியை (24) காதல் திருமணம் செய்து கொண்டார்.
எம்சிஏ பட்டதாரியான அருள்மொழி கோவையில் கணவர் வீட்டில் வசித்து வந்தார். அமெரிக்கா செல்ல விரும்பிய இவர் விசா பெற சென்னை அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்தார். மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்வதாகக் கூறி விசா கேட்டிருந்தார்.
இதற்கான தகுதித் தேர்வை எழுதாமலேயே, எழுதியதாக புரோக்கர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்தார். ஏற்கனவே இந்தத் தேர்வெழுதிய ஆண் ஒருவரின் சான்றிதழில், அருள்மொழியின் படத்தை ஒட்டி போலி ஆவணம் தயாரிக்கப்பட்டது.
அந்த போலி ஆவணத்தில் பெண் என்பதற்கு பதிலாக, ஆண் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதை அருள்மொழி கவனிக்கவில்லை.
விசா தொடர்பான விசாரணைக்காக அருள்மொழி அமெரிக்க தூதரகத்துக்கு வந்தபோது அது போலி ஆவணம் என்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக ராயப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தந்தனர்.
அவரை போலீசார் கைது செய்தனர். புரோக்கரையும் பிடிக்க வலை வீசப்பட்டு்ள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications