திமுக அரசு மீனவர்களுக்கு உதவி செய்கிறது - அதிமுக ஆட்சியோ பாழ்படுத்தியது: அமைச்சர் சாமி
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு மண்ணெண்ணையும், மீன் பிடிக்காத காலத்தில் உதவித் தொகையும் தராமல் அவர்கள் வாழ்க்கையைப் பாழ்படுத்தினர். ஆனால் முதல்வர் கருணாநிதியோ மீனவர்களுக்கு வாரி வழங்கி வருகிறார் என்று கூறினார் மீன்வளம் மற்றும் கால்நடை, பால்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி.
சட்டசபையில் இன்று மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
கச்சத்தீவை மீட்க வேண்டும்...
அதில் கலந்து கொண்டு அதிமுகவைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் அடிக்கடி பிடித்து சித்ரவதை செய்கிறார்கள். மீன்களை கொள்ளையடிக்கிறார்கள்.
கச்சத்தீவை திரும்ப பெற்றால்தான் நிம்மதியாக மீனவர்கள் மீன்பிடிக்க முடியும். எனவே கச்சத்தீவை மீட்க இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
45 ஆயிரம் குடும்பங்கள் மண்ணெண்ணை உபயோகப்படுத்திதான் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அரசு மண்ணெண்ணை கொடுக்க மறுக்கிறது.
9 ஆயிரம் மீன்பிடி படகுகளுக்கு மண்ணெண்ணை தேவைப்படுகிறது. ஆனால் அரசு தருவதில்லை. தனியாரிடமும் வாங்க முடிவதில்லை. அதையும் மீறி வாங்கினால் போலீஸ் பிடிக்கிறது. எனவே அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் கேபிபி சாமி கூறுகையில், மீனவர்கள் திருட்டுத்தனமாக மண்ணெண்ணை வாங்கும் சூழ்நிலை உள்ளதாக சொல்கிறார். நீங்கள் இதற்கு முன் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். உங்கள் ஆட்சியில் என்ன முயற்சி எடுத்தீர்கள்.
கடைசி 3 மாதத்தில் மட்டும் மத்திய அரசிடம் இருந்து மண்ணெண்ணை பெற்று வழங்கினீர்கள். அதுவும் விலையை அதிகமாக்கி மீனவ மக்களை பாழ்படுத்தினீர்கள் என்றார்.
தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
மீன்பிடிக்க தடை செய்யப்படும் 45 நாட்களின்போது கொடுக்கப்படும் பணம் போதாது. அதை அதிகரித்து தர வேண்டும். 500 ரூபாய் தருவதை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றார்.
இதைக் கூட தரவில்லையே அதிமுக...
அதற்குப் பதிலளித்த சாமி, அ.தி.மு.க. ஆட்சியில் இந்த உதவி தொகை கூட வழங்கவில்லை. தி.மு.க. ஆட்சியில்தான் 45 நாட்களுக்கு தலா ரூ.500 வீதம் 2 லட்சம் மக்களுக்கு பணம் கொடுக்கிறோம். இதற்காக ரூ.10 கோடியை வாரி வழங்குபவர் முதல்- அமைச்சர் கருணாநிதி என்றார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications