பண மோசடிப் புகாரில் கோவை அண்ணா பல்கலை. துணைவேந்தர் - விசாரணைக்கு பர்னாலா உத்தரவு
சென்னை: பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டதாக கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊழல் தடுப்புப் போலீஸ் விசாரணைக்கு ஆளுநர் பர்னாலா உத்தரவிட்டுள்ளார்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் பணத்தை மோசடியாக சுருட்டியுள்ளார் என்பது ராதாகிருஷ்ணன் மீதான புகாராகும்.
ஊழல் வழக்கில் சிக்கி, ஊழல் தடுப்புப் போலீஸ் விசாரணைக்கு உட்படும் முதல் தமிழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதாகிருஷ்ணனின் மோசடி குறித்து வழக்கறிஞர் எஸ்.சிவபாண்டி என்பவர் ஆளுநருக்கு புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகாரைப் பரிசீலித்த ஆளுநர் பர்னாலா, இதுகுறித்து விசாரிக்குமாறு கூறி ஊழல் தடுப்பு போலீஸ் பிரிவு இயக்குநருக்கு பரிந்துரைத்தார்.
இந்த சர்ச்சை குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில், என் மீதான புகார் மனுவின் நகல் எனக்குக் கிடைத்துள்ளது. அதில் ஒரு உண்மையும் இல்லை. அத்தனையும் பொய்யான புகார்கள். எனது கரங்கள் சுத்தமானவை என்றார்.
ஆளுநரின் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மாவிடமிருந்து ஊழல் தடுப்புப் போலீஸாருக்கு ராதாகிருஷ்ணன் விவகாரத்தை விசாரிக்குமாறு கடிதம் போயுள்ளதாம். இருப்பினும் ராதாகிருஷ்ணன் முக்கியப் பதவியில் இருப்பதால் அரசின் பதிலுக்காக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் காத்திருப்பதாக தெரிகிறது. அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லையாம்.
ஆனால் ஆளுநரே விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதால், அரசு இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், அரசு இதில் தலையிட்டால் அது ஆளுநரின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும். காரணம், ஆளுநர்தான் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார். எனவே அவரது அதிகாரத்தில் அரசு தலையிட முடியாது என்கிறார்கள் அவர்கள்.
கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பெரும் பண மோசடிப் புகாரில் சிக்கியிருப்பது கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications