இந்தியாவிலும் டிரேட்அஸ் இ-காமர்ஸ் தளம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இபிபோ.காம் இணையதளத்தின் உரிமையாளரான தென் ஆப்பிரிக்காவின் மீடியா குழுமம், நாஸ்பர்ஸ், தனது இ-காமர்ஸ் தளமான டிரேட்அஸ் இணையதளத்தை இந்தியாவுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

ஏலம் மற்றும் ஷாப்பிங் இணையதளமான இதற்கு tradeus.in என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த தளம், 12 ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பெயர்களில், யு.ஆர்.எல்.களில் இயங்கி வருகிறது.

பல்கேரியாவில் இதன் பெயர் ஆக்ரோ.பிஜி, ரஷ்யாவில் மோலோடாக்.ரு, நார்வேயில் Qxl.no. தற்போது இந்தியாவில் டிரேட்அஸ்.இன் என்ற பெயரில் இதன் வர்த்தகத்தை பயன்படுத்தலாம்.

டிரேட்அஸ் இ காமர்ஸ் வர்த்தக தளம், ஸ்லோவேகியா, ருமேனியா, போலந்து, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் உள்ளது.

இந்தியப் பிரிவு இ காமர்ஸ் வர்த்தகப் பிரிவு தலைவராக சமீபத்தில் ராகுல் சேத்தி நியமிக்கப்பட்டார். முன்பு இவர் வெப் 18 நிறுவனத்தின் இ காமர்ஸ் பிரவின் தலைவராக இருந்தார். MobileNXT.com தளத்தின் பிசினஸ் ஹெட் ஆகவும் சேத்தி இருக்கிறார்.

சேத்தியின் பாஸ் ஆக இபிபோ.காம் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் காஷ்யப் இருப்பார்.

டிரேட்அஸ் தளத்தின் செயல்பாடுகள் குறித்து சேத்தி கூறுகையில், பி2சி மற்றும் சி2சி ஆகிய இரு பிரிவுகளில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தப் போகிறோம்.

நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை எங்களது தளம் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யலாம்.

தொடக்கத்தில், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய ஆறு பெருநகர வாடிக்கையாளர்களை மட்டும் எங்களது டார்கெட் ஆக கொள்ளவுள்ளோம்.

வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும் பேசி வருகிறோம். அவை யார் என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது.

விற்பனையாளர்கள் எங்களுக்கு கட்டும் டிரான்சாக்ஷன் கட்டணம் மூலம் 75 சதவீத வருவாயை ஈட்டவும், மீதமுள்ள 25 சதவீதத்தை விளம்பரங்கள் மூலம் ஈடு கட்டவும் திட்டமிட்டுள்ளோம்.

மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், நுகர்வோர் பொருட்கள், எம்பி3 பிளேயர்கள் உள்ளிட்டவற்றின் விற்பனைக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றார்.

ஆசியாவிலேயே இந்தியாவில்தான் முதல் முறையாக tradeus.in தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+