திட்டமிட்டபடி சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - அதிகாரிகள்
சென்னை: டெல்லி மெட்ரோ ரயில் பால விபத்தினால் சென்னை மெட்ரோ திட்டப் பணிகள் தடங்கலைச் சந்திக்கவில்லை. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன் என்று மெட்ரோ திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ளதைப் போலவே சென்னையிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தின் வழிகாட்டுதலின் பேரில்தான் சென்னை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. டெல்லி மெட்ரோ ரயில் கழக தலைவர் ஸ்ரீதரன்தான், சென்னை திட்டத்தையும் வழி நடத்தி வருகிறார்.
கடந்த 2007ம் ஆண்டு டெல்லி மெட்ரோ ரயில் கழகம், சென்னை மெட்ரோவுக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கியது.
இதையடுத்து கடந்த மாதம் 10ம் தேதி இப்பணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில்தான் டெல்லி மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் இதனால் சென்னை திட்டம் எந்த வகையிலும் பாதிப்படையாது. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன என்று சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் கழக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், டெல்லி நிலவரத்தை தொடர்ந்து கவனித்துக் கொண்டுள்ளோம்.
இருப்பினும் முன்பே திட்டமிட்டபடி 2014-15ம் ஆண்டு வாக்கில் சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications