தமிழக கோவில்களில் பெண் அர்ச்சகர்கள்?
சென்னை: அரசின் கண்காணிப்பில் உள்ள கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிப்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று காங்கிரஸ் எம்எல்ஏ காயத்ரி தேவி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பெரியகருப்பன்,
கிராமங்களில் உள்ள தனியார் கோவில்களில் பெண்கள் பூசாரிகளாக பணிபுரிகிறார்கள். தேவைப்பட்டால் அரசின் கண்காணிப்பில் உள்ள கோவில்களிலும் பெண் அர்ச்சகர்களை நியமிப்பது பற்றி முதல்வரை கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
தற்போது அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் 207 பேர் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால், அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ளது. முடிவு வந்த பிறகு அவர்களது நியமனம் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications