ஆஸி. விமானபடை இணையம்-ஹேக் செய்த இந்தியர்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய விமானப்படையான ராயல் ஆஸ்திரேலியன் ஏர்போர்ஸ் இணையதளத்தை ஹேக் செய்துள்ளார் இந்திய சாப்டவேர் என்ஜீனியர் ஒருவர்.
ஹேக் செய்து உள்ளே புகுந்த அவர், இந்திய மாணவர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இனவெறித் தாக்குதல்களை நிறுத்த பிரதமர் கெவின் ரூட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தியை போஸ்ட் செய்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை கூறுகையில், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விமானப்படை இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. ஆனால், மேல் விவரங்களை அது தர வில்லை.
இருப்பினும் தி ஏஜ் செய்தித் தாள் இதுகுறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதுல் திவிவேதி என்ற இந்தியர் விமானப்படை தளத்தை ஹேக் செய்துள்ளார். அவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர்.
ஹேக் செய்து உள்ளே புகுந்த அவர், இது ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக நடந்து வரும் இனவெறித் தாக்குதல்களை பிரதமர் கெவின் ரூட் தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் உங்களது அனைத்து இணையதளங்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கும் செய்தியை விட்டுள்ளார்.
இணையதளம் ஹேக் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விமானப்படை தனது இணையதளத்தின் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைத்து விட்டது. பின்னர் சில மணி நேரங்களில் மீண்டும் இணையதளம் செயல்பாட்டுக்கு வந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications