தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் மரணம்
சென்னை: உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் ராமு வசந்தன் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 54.
இவர் நடிகர் விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.
சென்னை சாலி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ராமு வசந்தினுக்கு கடந்த இரு ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு இருந்துவந்தது. இதற்கென இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு ராமு வசந்தனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்றிரவு 10.45 மணியளவில் ராமு வசந்தன் மரணமடைந்தார்.
தகவல் அறிந்ததும், தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர்.
கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மரணமடைந்த ராமு வசந்தனுக்கு மனைவியும், மகனும், மகளும் உள்ளனர்.
விஜய்காந்தின் ரசிகர் மன்ற நிர்வாகியாக நீண்டகாலம் பணியாற்றி, பின்னர் அவர் அரசியலுக்கு வந்ததும் அவருடன் இணைந்து செயல்பட்டவர் ராமுவசந்தன்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications