தடையில்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்

சட்டசபையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு எம்எல்ஏ குணசேகரன் பேசுகையில், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையில்லாமல் நடத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி,
ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை இல்லாமல் நடத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து மாநில அரசு ஒரு சட்டம் கொண்டு வரலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வரும் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு அவசர சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது என்றார்.
அனைத்து மாவட்டங்களிலும் மாராதான்..
விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் மைதீன்கான் கூறுகையில்,
இந்த ஆண்டு கோவையில் ரூ.1.75 கோடி மதிப்பில் நீச்சல்குளம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் 8 இடங்களில் விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
மராத்தான் ஓட்டம் சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் இது நடத்தப்படும்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த கம்ப்யூட்டர் முறையில் பயிற்சி அளிக்க ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
விளையாட்டு பள்ளி, விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுபடி ரூ.40லிருந்து ரூ.75 ஆக உயர்த்தப்படும். விளையாட்டு சீருடைக்காக வழங்கப்படும் ரூ.1,200 இனி ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்.
கபடி போட்டி பயிற்சியின்போது காயம் ஏற்படுவதை தடுக்க செயற்கைமெத்தை பயன்படுத்தப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செயற்கை கபடி மெத்தை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications