3 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை
தர்மபுரி: தர்மபுரி அருகே மூன்று வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ளது சிவா காலனி.
இந்த பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (30). கார் டிரைவர். இவரது மனைவி சத்யா (27) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு கலா (8), சச்சின்குமார் (5), விஜயராகவன் (1) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல் இருந்து வந்தது.
இந்த நிலையில், கலா, சச்சின்குமார் ஆகியோர் பள்ளிக்கு சென்ற தருணத்தில், சத்யா தனது ஒரு வயது குழந்தை விஜயராகவனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு, சென்றவர் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சத்யாவைத் தேடி அவரது கணவர் சிவலிங்கம் மற்றும் உறவினர்கள் விடிய விடிய தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மருத்துவமனை அருகே உள்ள ஒரு கிணற்றில் சத்யா அவரது குழந்தை விஜயராகவன் ஆகியோர் பிணமாக கிடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த சிவலிங்கம் அங்கு சென்று பார்த்து கதறி அழுதார்.
போலீசார் விசாரணையில் சத்யா தனது குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications