ராஜ்யசபா-அமைச்சர் ஆங்கிலத்தில் பேசியதால் அமளி
டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஆங்கிலத்தில் பதிலளித்ததால் ராஜ்யசபாவில் பெரும் அமளி ஏற்பட்டது.
ராஜ்யசபா கேள்வி நேரத்தின்போது அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ஆங்கிலத்தில் பதிலளிக்க ஆரம்பித்தார். இந்தக் கேள்வி இந்தியில் கேட்கப்பட்டிருந்தது. கேட்டிருந்தவர் பாஜக உறுப்பினர் கல்ராஜ் மிஸ்ரா.
இந்தியில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஆங்கிலத்தில் பதிலளித்ததை கல்ராஜ் மிஸ்ரா கடுமையாக ஆட்சேபித்தார்.
அவர் பேசுகையில், அமைச்சருக்கு இந்தி நன்றாகத் தெரியும். மேலும் கேள்வி இந்தியில் கேட்கப்பட்டுள்ளது. எனவே அமைச்சர் எப்படி ஆங்கிலத்தில் பதிலளிக்கலாம் என்று ஆவேசமாக கேட்டார்.
இதற்கு ரமேஷ் இந்தியில் பதிலளிக்கையில், கல்ராஜ் மிஸ்ராஜி, முலாயம் சிங்கிடமிருந்த இந்த வியாதி இப்போது உங்களையும் தொற்றிக் கொண்டு விட்டதா என்றார்.
இதற்கு பாஜக, சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை எழுப்பி அமளியில் இறங்கினர். அக்கட்சிளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து, இந்தி என்பது வியாதி அல்ல என்று கூறினர்.
இந்த விவகாரத்தால், சபையில் சிறிது நேரம அமளியாக இருந்தது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications