ரயில் பயணிகளைக் காப்பற்றிய பெண்!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததைக் கண்ட பெண் ரயிலை நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
விழுப்புரம் அருகேவுள்ள ராகவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி தண்டவாளத்தைக் கடந்து வயலுக்குச் சென்றபோது தண்டவாளத்தில் பெரிய விரிசல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த நேரத்தில் புதுச்சேரி-விழுப்புரம் ரயில் அந்தப் பாதையில் வரும் என்பதை அறிந்திருந்த அவர் ரயில் வரும் திசை நோக்கி ஓடினார். நெடுந்தூரம் ஓடிய அவர் சைகை காட்டி ரயிலை நிறுத்துமாறு எச்சரித்தார்.
இதைப் பார்த்த ரயில் என்ஜினின் டிரைவரும் விரிசல் பகுதிக்கு முன்னதாகவே ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications