துவரம் பருப்பு விலை உயர்வு ஏன்?
சென்னை: உற்பத்தி குறைவால் தான் துவரம் பருப்பின் விலை அதிகரித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
இது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அவர் சட்டசபையில் பதிலளிக்கையில்,
நாடு முழுவதும் மழை குறைந்துள்ளதால் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளின் உற்பத்தியும் வெகுவாக குறைந்துவிட்டது. அதனால்தான் துவரம் பருப்பின் விலை உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் 32.3 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு உற்பத்தியாகிறது. ஆனால் 34 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு மட்டும் 7.86 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு தேவைப்படுகிறது. ஆனால் அதில் 20 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தியாகிறது.
இதனால் துவரம் பருப்பு தேவைக்கு மற்ற மாநிலங்களையே நம்ப வேண்டியுள்ளது.
மகாராஷ்டிரம், ஆந்திரம், குஜராத் போன்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்றி ரேஷனில் துவரம் பருப்பு விற்பனை செய்து வருகின்றன. அதற்காக இந்த மாநிலங்கள் மொத்தமாக துவரம் பருப்பை கொள்முதல் செய்து வருகின்றன. துவரம் பருப்பின் திடீர் விலை உயர்வுக்கு இதுவும் காரணமாகும்.
டிசம்பரில் பர்மாவில் இருந்து துவரம் பருப்பு வரத் தொடங்கும். அதன் பிறகு விலை குறையும். பருப்பு விலையைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கும், உணவுத்துறை அமைச்சர் சரத் பவாருக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதை ஏற்று அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருள்களுக்கு ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது என்றார் வேலு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications