இடைத்தேர்தல்- 5 தொகுதிகளிலும் பாஜக போட்டி
சென்னை: இளையான்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், பர்கூர், தொண்டாமுத்தூர் ஆகிய 5 தொகுதிகளுக்கும் நடக்கும் இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று பாஜக தலைமையகத்தில் நடந்தது. அதில், கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதில், 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து இல. கணேசன் நிருபர்களிடம் பேசுகையில்,
5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக பொன். ராதாகிருஷ்ணன் (கம்பம்), எச். ராஜா (இளையாங்குடி), சரவண பெருமாள் (ஸ்ரீவைகுண்டம்), ரமேஷ் (பர்கூர்), செல்வக்குமார் (தொண்டாமுத்தூர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
புதிய தமிழகமும் புறக்கணிப்பு?
இதற்கிடையே இடைத் தேர்தலை அதிமுக வழியில் புதிய தமிழகம் கட்சி புறக்கணிக்கிறது.
இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை..
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகம் குழி தோண்டு புதைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்னணு எந்திரம் மூலம் ஆளும் கட்சி முறைகேடுகள் செய்தும்,
திட்டமிட்டு லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியது.
மேலும் வாக்களார்களை பணம் கொடுத்து விலை வாங்கும் வேலைகளும் நடைபெற்றது. இந்த முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்த போதிலும்
எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில் தான் 5 சட்ட சபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலிலேயே பெரும் மோசடி நடந்துள்ள நிலையில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை எனக் கூறி பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இது தமிழக மக்களுக்கு நலன் தரக்கூடியதாக இருக்காது என்றாலும் அ.தி.மு.க.வின். முடிவு சரியானது என்று கருதுகிறோம். இதைப் பின்பற்றி எங்கள் கட்சியின் முடிவை வரும் 24 -ம் தேதி அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications