ஸ்டாலின், ரஹ்மான், மயில்சாமி அண்ணாதுரைக்கு ஆக. 1ல் டாக்டர் பட்டம்
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு சென்னை பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 1ம் தேதி கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான ஏராளமான மேம்பாலங்கள் கட்டியதற்காகவும், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்து வருவதற்காகவும் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
இதேபோல், உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆஸ்கர் விருது வாங்கி இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்ததற்காக சினிமா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும்,
சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரைக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு எடுத்தது. இதற்கு பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் விழாவில் மூன்று பேருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கிறார்.
விழாவில், பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர், முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன் மற்றும் கல்வியாளர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின் கெளரவ டாக்டர் பட்டத்தினைப் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications