இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள்: பார்வர்டு பிளாக்
மதுரை: கூட்டணிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள் என்று, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தமிழ்மாநில தலைமை செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
மாநில தலைவர் நவமணி, நிதிச் செயலர் ஜெயராமன், செயலர்கள் மகேஸ்வரன், ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் மாநிலத் தலைவர் நவமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இடது சாரி அணியில் உள்ள எங்களை இவர்கள் எதிலும் கலந்து ஆலோசிப்பதில்லை. இடது சாரிகள் சந்தர்ப்பவாதத்துடன் செயல்படுகின்றனர்.
திருச்சியில் நடந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை மட்டும் அழைத்துள்ளனர். தமிழகத்தில் இவர்கள் இருவர் மட்டுமே இடது சாரிகள் என்ற நினைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
தலித்துகளுக்காக போராடுவதாக கூறும் இவர்கள், கூட்டணியில் தனித் தொகுதிகளைக் கொடுத்தால் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. ஐந்து தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இடதுசாரிகளை நாங்கள் ஆதரிக்க முடியாது.
அதிமுகவும் தேர்தல் புறக்கணிப்பை தன்னிச்சையாகவே முடிவு எடுத்துள்ளது. இந்த செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும், நாங்கள் அதிமுகஎடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications