சோனியா சஸ்பென்ஸ்-தவித்த பிரதமர் மன்மோகன்!

சமீபத்தில் எகிப்து பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங்- பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் இணைந்து வெளிட்ட கூட்டறிக்கையில், "அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை நிபந்தனை போல பயன்படுத்தக் கூடாது'' என்று கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் பாகிஸ்தானிடம் இந்தியா சரணடைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கூட்டறிக்கை தொடர்பாக மன்மோகன் சிங் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாயின. கடும் கோபத்தில் உள்ள சோனியா, பிரதமரையே மாற்றக் கூடும் என்று கூட கூறப்பட்டது.
இதை அமைச்சர்கள சிலர் மறுத்தாலும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக மறுக்காமல் இருந்து வந்தது. இதனால் சஸ்பென்ஸ் அதிகரித்தது.
இந் நிலையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இதையடுத்து பிரதமருக்கு காங்கிரஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில்,
எகிப்து பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங்- பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் இணைந்து வெளிட்ட கூட்டறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்கவுள்ளார். அப்போது எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கும் அவர் உரிய பதிலை அளிப்பார். இந்தியாவின் நலனுக்கு எதிராக எந்த காரியத்தையும் செய்யவில்லை என்பதை மன்மோகன் சிங் நிரூபிப்பார் என்பதில் காங்கிரசுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.
பிரதிபாவிடம் முறையிட்ட பாஜக கூட்டணி:
இந் நிலையில் சர்ச்சைக்குரிய இந்தியா-பாகிஸ்தான் கூட்டறிக்கை தொடர்பாக ஜனாதிதி பிரதிபா பாட்டீலிடம் பாஜக கூட்டணி இன்று முறையிடட்டது.
இந்தக் கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் பாஜக தலைவர் அத்வானி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்று ஜனாதிபதியிடம் இது குறித்து புகார் அறிக்கையைத் தந்தனர்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications