திமுகவால் பதவியிழந்த கம்யூ நகராட்சி தலைவர்!
ஈரோடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகராட்சித் தலைவருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
ஈரோடு அருகில் உள்ளது பெரியசேமூர் மூன்றாம் நிலை நகராட்சி. இந்த நகராட்சி தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் உள்ளார்.
நகராட்சியில் உள்ள 18 கவுன்சிலர்களில் கம்யூனிஸ்ட் இரண்டு,
திமுக ஒன்பது, அதிமுக மூன்று, தேமுதிக, பாமக, காங்கிரஸ்,
சுயேச்சை ஆகியவை தலா ஒரு கவுன்சிலர்கள் உள்ளனர்.
திமுக ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரபாகரன் பெரியசேமூர் நகராட்சித் தலைவர் பதவியை வகித்து வந்தார்.
பிரபாகரன் மீது நகராட்சி திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் சுப்பு, கவுன்சிலர்கள் சக்திவேல், பூபதி ஆகியோர் நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்தின் மீது நகராட்சிகளின் மண்டல இயக்குனர் விஜயலட்சுமி தலைமையில் ஓட்டெடுப்பு நடந்தது.
தீர்மானத்தை ஆதரித்து 15 பேர் ஓட்டு அளித்தனர். எதிராக மூன்று பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். இதனால், நகராட்சித் தலைவர் பதவியை பிரபாகரன் இழந்தார்.
தேர்தல் கமிஷன் தேதி அறிவித்த பின், கவுன்சிலர்களால் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.












Click it and Unblock the Notifications