பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மாதம் நடந்த பிளஸ்டூ சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

பிளஸ்டூ தேர்வில் பெயிலான மாணவ, மாணவியருக்ககாக ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

கீழ்க்காணும் இணையதளங்களில் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

www.pallikalvi.in

30ம் தேதி மதிப்பெண் பட்டியல்...

முன்னாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்கள் இந்த மாதம் 30-ம் தேதி பிற்பகல் முதல் தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் வழங்கப்படும்.

தத்கல் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விடைத்தாள் நகல், விடைத்தாள் மறு கூட்டல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 3, 4, 5-ம் தேதிகளில் வழங்கப்படும்.

இந்த விண்ணப்பங்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள், இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி மற்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 ஆகியவற்றில் அலுவலக நேரங்களில் கிடைக்கும்.

விண்ணப்பக் கட்டணத்தை "இயக்குநர், அரசுத் தேர்வுகள் துறை, சென்னை-6' என்ற பெயரில் டிடி மூலம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விண்ணப்பங்கள் பெற்ற அலுவலகங்களிலேயே ஆகஸ்ட் 5-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விடைத்தாள் நகலுக்கான கட்டணம்:

மொழிப் பாடங்கள்: ரூ.550, மற்ற பாடங்கள் (ஒவ்வொரு பாடத்துக்கும்) ரூ.275.

மறு கூட்டலுக்கான கட்டணம்:

மொழிப் பாடங்கள், உயிரியல் (ஒவ்வொரு பாடத்துக்கும்): ரூ.305

மற்ற பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்): ரூ.205 என்று குறிப்பிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+